சென்னை (19 பிப் 2020): சென்னையில் ஜமாத்துல் உலமா சபை தலைமையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறைவு பெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் லட்சக் கணக்கான மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் அமைதியாக நிறைவுற்றது.