சென்னை (24 ஜூன் 2021): சென்னையில் ‘டெல்டா பிளஸ்’ தொற்றால் நர்ஸ் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது.
பெங்களூரு வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 1,159 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 554 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், சென்னையை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
அவர் தற்போது குணமடைந்துவிட்டார். இருப்பினும் அவரது உடல்நிலை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.