மதுரா (24 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஒரு மசூதியின் மினாரா, மர்ம நபர்களால் இடிக்கப் பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசம் மதுரா மாவட்டத்தின் சாட்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதி மினாராவை புதன்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் இடித்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் அளித்த தகவலை அடுத்து கிராமத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக (மதுரா கிராமப்புற) போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஷ் சந்திரா கூறினார்.
“இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
“இக் கொடுஞ் செயலில் ஈடுபட்டோரை விரைவில் கண்டு பிடிப்போம். அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்,
இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றன.