சென்னை (11 ஆக 2020): சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் குறைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப் போக்குவரத்துக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை இன்று காலையில் வீசிய கடும் வெயிலை தொடர்ந்து மாலையில் பெய்த மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.