சென்னை (16 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பெண்கள் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. மேலும் சென்னையில் தொடர் போராட்டத்தை பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
முக்கிய கோரிக்கையாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை சட்டம் உள்ளிட்ட சமீபத்திய மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வண்ணாரப்பேட்டையில் தக்குதல் நடத்திய போலிசார் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும், இவற்றை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்றத்தை நோக்கி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
வீடியோ நன்றி: மீடியா ஒன் டிவி