சென்னை (16 பிப் 2020): தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஐபிஎஸ் பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.