கோழி இறைச்சி கடைக்கு சீல்!

Share this News:

புதுச்சேரி (21 மார்ச் 2020): புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சலுகை விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்து, கூட்டத்தை கூட்டிய கடைக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோழிஇறைச்சியால் கொரோனா பரவவில்லை என்பதை தெரிவிப்பதற்காக, சலுகை விலையில் கோழிகள் விற்கப்படுவதாக அக்கடையில் விளம்பரம் வைக்கப்பட்டது. இதை பார்த்து நூற்றுக்கணக்கான மக்கள் கடை முன்பு கூடினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதெனக்கூறி, கூட்டத்தை கலைத்ததோடு, கோழிக்கடைக்கு சீல் வைத்தனர்.

கோழி, முட்டை விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply