சென்னை (30 டிச 2019): தேவதாசி முறைக்கு நான் முற்றிலும் எதிரானவள் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பாடகி சின்மயியின் அம்மா டி பத்மஷ்னி , ” தேவதாசி முறை ஒட்டு மொத்த பாரத தேசத்துக்கும் சொந்தமானது. அது எப்பேற்பட்டது தெரியுமா? இதனை சிதைத்ததால் பெரியாரை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்” என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அம்மாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சின்மயி, “என் அம்மாவின் கருத்தில் நான் மாறுபடுகிறேன். இதனை நான் ஆதரிக்கவில்லை. என் அம்மாவின் கருத்துக்கு அவரே பொறுப்பு. அதற்காக என்னை கீழ்த்தரமாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.