கோவை (28 டிச 2019): கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
இந்த சுவரின் உரிமையாளர் பெயருக்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் போலீசாரால் கொடூரமாக தக்கப்பட்டார். மற்றும் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான சுவர் உரிமையாளரை கைது செய்யக் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்ட்டு இதுவரை விடுதலை செய்யப்படவில்லை
இந்நிலையில் அருந்ததியருக்கு உரிய சுயமரியாதை இந்து மதத்தில் அளிக்கப்படவில்லை என்பதால் வரும் ஜனவரி 5 ஆம் தேதி 3000 அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் யார் யார் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை.
இதனை அடுத்து மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.