சென்னை (28 நவ 2020): அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு அவர் தெரிவித்ததாவது :
அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களின் சிறப்பான பணியால் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் துவக்கப்படும்.” என்றார்.