கோவை (20 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் நாடெங்கும் பரவியுள்ள நிலையில் கோவையிலும் தொடர் போராட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லியைப் போன்று சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
https://www.facebook.com/inneram/videos/2448997005350534/
இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.