சிம்லா (08 நவ 2022): சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் 26 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மாநில பொறுப்பாளர் சுதன் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேகி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இருவரும் கடந்த சில நாட்களாக ஹிமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரத்திற்காக இன்று ஹிமாச்சல பிரதேசம் வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணைந்துள்ளனர்.