சென்னை (08 நவ 2022): தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு இசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு பேஸ்புக் பதிவில், இது வெறும் டிரைலர் தான் என்றும், இனிமேல் தான் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என கூறிய அவர், 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை கோரத்தாண்டவம் ஆடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னை ஹாட்ஸ்பாட் பகுதியாக மாறும் எனவும் எச்சரித்துள்ளார்.