கிருஷ்ணகிரி (03 மே 2020): ஆந்திராவின் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருடன் சென்ற 3 பேர், உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.