கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞர் காதலியுடன் ரொமான்ஸ் – பொறி வைத்து பிடித்த தனிப்படையினர்!

Share this News:

மதுரை (26 மார்ச் 2020): மதுரை கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞரை அவரது காதலி வீட்டில் வைத்து தனிப்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை வந்த இளைஞர் கொரோனா கண்காணிப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலை தப்பியோடியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனா முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி வீட்டில் இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் கைது செய்து தற்பொழுது மதுரை கொண்டு வந்தனர். மேலும் இளைஞரின் காதலியையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply