சென்னை(17 ஜூலை 2020):சென்னையை அடுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் தமிழக அரசு மம்முரமாக ஈடபட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிதாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைப்பதற்காக 4 கோடி ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு.
சென்னையைப் பொறுத்த வரை கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரியப்படுத்துகின்றன.
இத்தகைய இக்கட்டான சூழலில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகவும், மற்றும் புதிதாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பதற்காகவும் நிதி ஒதுக்கி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.