புதுக்கோட்டை (28 மார்ச் 2020): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெருமளவில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களாலேயே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவல் முதல் கட்டத்தில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
புதுக்கோட்டையில் வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தவர்கள் என கூறி 843 பேரை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த தகவலால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து உள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 என தெரிய வந்துள்ளது. இதனால், மீதம் உள்ளவர்களை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.