தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 42 ஆக உயர்வு!

Share this News:

சென்னை (28 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 வயதான இந்த ஆண், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கும், காட்பாடியை சேர்ந்த 49 வயது நபருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதன் மூலம் தமிழகத்தில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.


Share this News:

Leave a Reply