அரசு மருத்துவமனை குறித்து அதிர வைக்கும் தகவல் – மருத்துவரின் பரபரப்பு இறுதி நிமிடங்கள்!

Share this News:

இராஜபாளையம் (28 ஜூலை 2020): கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்த மருத்துவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால், கடந்த 10-ம் தேதி, கொரோனா தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில். அங்கு தனக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்து வருவதாகவும், ஆனால் ஆக்சிஜன் கூட சரிவர வழங்கப்படாததால் 2 நாட்களில் இறந்து விடுவேன் என்றும் உருக்கமாக பேசியுள்ளார். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

மருத்துவர் சாந்திலால் உடல், மதுரை தத்தனேரி மின்மயானத்தில், அரசு சார்பில் இன்று தகனம் செய்யப்பட்டது.

காந்திலால் ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்ததுடன், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு, வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply