தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

Share this News:

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் புதியதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் 22-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு சேலம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply