சென்னை (06 மே 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவி உள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் சென்ற அரியலூரைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.