சென்னை (29 ஜூலை 2020): சமூக வலைதளங்களில் வெளியிட்ட போலி வீடியோக்களை நீக்க கூறி மாரிதாஸுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்த நிலையில், ₹ 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார்.
மாரிதாஸ் தொடர்ந்து மத துவேஷ கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறமை குறிப்பிடத்தக்கது.