பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – விஷம் வைத்து கொன்றதாக நடிகை மீது வழக்கு!

Share this News:

மும்பை (27 ஆக 2020): நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை விஷம் வைத்து கொலை செய்ததாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு எதிராக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பண மோசடி விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட ரியா சக்ரபோர்த்தியின் மொபைலில் காணப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களின் பதினைந்து பக்கங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு மும்பைக்கு சென்று நடத்திய விசாரணையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரியா சக்போர்த்தி மற்றும் ஒரு சிலருக்கு எதிராக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் “குற்ற எண் 15” பதிவு செய்துள்ளது. “போதைப்பொருள் வைத்திருத்தல், வாங்குதல் மற்றும் பயன்படுத்துதல்” மற்றும் “ஒரு குற்றத்தைச் செய்வதற்கான தூண்டுதல் மற்றும் குற்றச் சதி” தொடர்பான சட்டத்தின் கீழ் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் ரியா சக்ரபோர்த்தி நீண்ட காலமாக எனது மகன் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து வந்து உள்ளார். அவர்தான் அவனகொலையாளி. அவரும் அவருடைய கூட்டாளிகளும் தாமதமின்றி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply