திமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லாதது திமுக முஸ்லிம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சர்ச்சைகளும் சூடுபிடித்துள்ளன. அதன் ஒரு பகுதி மதச் சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் களம் காணும் திமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை. இதற்கு முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால் அறிவிக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் இதன் பின்னணியில் துரைமுருகன் இருப்பதாகவும் பலர் கருதுகின்றனர்.
கூட்டணி கட்சியில் உள்ள மமகவில் உள்ள அதிருப்தி ஒருபுறம் என்றால் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதுபோல வேட்பாளர் பெயர் பட்டியலும் இல்லை.
இதற்கிடையே விருப்பமனு கொடுத்தவர்களில் முஸ்லிம்கள் யாரும் இல்லை என்ற கருத்தும் முஸ்லிம் திமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
இம்முறை வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளதால் திமுக முஸ்லிம்களில் ஒருவர் கூடவா வாரிசுகள் இல்லை? என்ற கேள்வியும் நடுநிலை முஸ்லிம்கள் வைத்துள்ளனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அறிவார்ந்த திமுக முஸ்லிம் தொண்டர்கள் முஸ்லிம் வேட்பாளர் பெயர் பட்டியலில் இல்லாததற்கு காரணத்தை விளக்கியும் வருகின்றனர்.
ஆனால் ஸ்டாலின் இதற்கு சரியான விளக்கம் அளித்தால் மட்டுமே முஸ்லிம் திமுக அடிமட்ட தொண்டர்களால் புரிந்து கொள்ள முடியும் என்பது பொதுப் பார்வை. என்ன பதிலளிக்கப் போகிறார் ஸ்டாலின்.
-அன்பழகன்