வெடிக்கும் பூகம்பம் – திமுக விசிக இடையே விரிசல்?

Share this News:

சென்னை (16 அக் 2020): தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் வேலைகள் நடைபெறுகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

அதிமுக கூட்டணியில் தற்போது யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியாத வகையில் கட்சித் தலைவர்கள் குழப்பி வருகின்றனர்.

திமுகவைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் தேர்தல் சமயத்தில் சில கட்சிகள் வெளியேறலாம், சில கட்சிகள் உள்ளே வரலாம் என குண்டை தூக்கிப் போட்டார் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்.

பாமகவை திமுக கூட்டணிக்குள் இழுத்து வர துரைமுருகன் முயற்சிப்பதாகவும் அதன் வெளிப்பாடே துரைமுருகனின் பேச்சு என கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போதே பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர துரைமுருகன் முயற்சித்ததாக கூறப்பட்டது. ஆனால் அப்போது அந்தக் கூட்டணி அமையவில்லை. இந்நிலையில் தற்போது பொதுச் செயலாளர் என்ற உயரிய பதவி வகிக்கும் துரைமுருகன் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர மும்முரம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கடந்த மாதம் துரைமுருகனும் அன்பு மணியும் சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் கசிந்தது.

பாமக திமுக கூட்டணிக்குள் சென்றால் அது திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கும். இதனால் அந்தக் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதை மறுத்தார். மறுப்பை வைத்து இக்காலத்தில் தீர்மாணிக்க முடியாதா சூழல் தற்போதைய அரசியல் நிலையில் உள்ளன. பொறுத்திருந்தௌ பார்ப்போம்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *