நகர்புற உள்ளாட்ச்சித்தேர்தல் – கோவை சேலத்தில் திமுக முன்னிலை!

Share this News:

சென்னை (22 பிப் 2022): நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கோவை, சேலம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தமுள்ள 21 நகராட்சிகளில் 18 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 81 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 221 இடங்களில் திமுகவும், 29 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.


Share this News:

Leave a Reply