கரூர் (06 மார்ச் 2020): தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கரூரில் வரவேற்க அதிமுக கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் திமுக கொடியும் இடையே பறந்து கலகலப்பூட்டியது.
தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு வியாழன் அன்று வந்தார்.
கரூர் அடுத்த காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்லூரிக்கு வருகை தந்து முறைப்படி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, அதிமுக கரூர் மாவட்ட கழகம் சார்பில் ஆங்காங்கே கட்சி கொடிகள் கட்டப்பட்டு, சாலைகளின் ஒரத்தில் அதிமுக கொடிகள் நேற்றே நடப்பட்டு இன்றும் ஆங்காங்கே பிரகாசமாக பறந்து வநத நிலையில், தி.மு.க கட்சி கொடிகளும் ஆங்காங்கே கட்டப்பட்டு, அதுவும் அதிமுக கட்சி கொடிகளுக்கு நடுவே பறந்தது.
இது திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, கரூருக்கு வருகை தரும் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்காக கட்டப்பட்ட கொடிகள். எனினும் இது பார்ப்போரை கொஞ்சம் குழப்பினாலும், பலர் அதனை ரசிக்கவே செய்தனர்.