தமிழக பெண்களுக்கு தொடரும் அதிர்ச்சி – மருத்துவர்கள் கவலை!

Share this News:

சென்னை (24 ஜன 2020): தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் டாக்டர் சாமிநாதன் இதுபற்றி கூறுகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பரிசோதனை செய்து முன்கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டிலேயே அதிகமாக உத்தரபிரதேசத்தில் 24, 181 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும்,மகாராஷ்டிராவில் 16,378 பேரும், மேற்கு வங்காளத்தில் 12,234 பேரும்,பீகாரில் 11,378 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், தமிழகத்தில்10,269 பேர் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply