சென்னை (18 மார்ச் 2021): தமிழகம் மட்டுமல்லாது 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “அரசியல், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலை உள்ளது. அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை. அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் போடாவிட்டால் அபராதம் என்பதில் உள்நோக்கம் இல்லை. அபராதம் விதிக்கும்போதுதான் மக்கள் அதைப் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் மீண்டும் ஊடரங்கு அமல் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” .என்றார்.