கள்ளக்குறிச்சி (23 ஏப் 2020): ஊரடங்கில் மதுக்கடைகள் மூடியிருக்க, மது போதையில் பெண் போலீசிடம் தன் திமிரைக் காட்டிய அதிமுக பிரமுகர் மீது எதற்கும் அச்சப்படாமல் ஆக்ஷன் எடுத்திருக்கிறார் அந்த பெண் போலீஸ்.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர்.
இந்த நிலையில் நாடெங்கிலும் மது கடைகள் மூடப்பட்டிருக்க, மது அருந்திவிட்டு போதையில் கள்ளக்குறிச்சியில் வாகனம் ஓட்டி வந்த அ.தி.மு.க பிரமுகர், பெண் போலீசிடம் தகறாறு செய்துள்ளார். மேலும் தான் ஆளுங்கட்சி என்கிற திமிரையும் காட்டியிருக்கிறார்.
அதற்கு அந்த பெண் போலீஸ் எதற்கும் அச்சப்படாமல், “நீ யாராக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க, இந்த நிலையில எங்கிருந்து மது கிடைத்தது?. ஊரடங்கில் ஊர் சுற்ற யார் அனுமதி கொடுத்தது?. வண்டியை ஓரமா நிறுத்துங்க” என்று சரமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசாரித்ததில், தகராறில் ஈடுபட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க விவசாய அணி செயலாளராக உள்ளார் கதிர் தண்டபாணி என்பதும், இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கை மதிக்காத அதிமுக பிரமுகர்.
கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர், 2016 சட்டமன்ற தேர்தல் ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளர் கதிர்.தண்டபாணி காவலர்களிடம் தகறாரில் ஈடுபட்டார்.@arivalayam @ptrmadurai@iamchsekar@isai_ pic.twitter.com/5rzCEq8qIZ— prakash s (@prakashvenil) April 22, 2020