வரலாற்று சாதனை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி நன்றி!

Share this News:

சென்னை (28 ஜன 2020): பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை என்றும் இதற்கென ஆகும் 3575 கோடி ரூபாயில் 2145 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் பங்காக 1430 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply