மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு!

Share this News:

மயிலாடுதுறை (25 மே 2020): மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகமெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. 30. நாட்கள் நோன்பிருந்த முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுதுகொண்டனர்.

இந்நிலையில் மயிலாடுதுறாஇ அருகே வடகரை மசூதியில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பெருநாள் தொழுகைநடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை தடுக்காத ஆய்வாளர் அனந்த பத்மநாபன் நாகை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Share this News: