துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

Share this News:

சென்னை (25 மே 2020): அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

டாக்டர்கள் அவருக்கு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர். நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்குச் சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்..

ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: