சென்னை (06 டிச 2022): பாமகவில் இருந்து சென்று பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் பாமகவில் இணையவுள்ளார்.
பாஜக செயல்பாடுகளில் கடுமையாக அதிருப்தி அடைந்ததால், தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் பாமக தலைமையின் அழைப்பை ஏற்று மீண்டும் பாமகவில் இணையவுள்ளார்.
தமிழக பஜகவின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு பல அதிரடி மாற்றங்களை செய்தார். இது கட்சியின் மூத்த தலைவர்களுக்கே பிடிக்காமல் இருந்தது.
மேலும் சமீபத்தில் பாஜகவில் நிலவி வரும் பாலியல் குற்றச்சாட்டுகளும் பல மூத்த தலைவர்கள் மட்டுமல்லாமல் பாஜகவில் உள்ள பல புதிய தலைவர்களையே முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்த பலர் மீண்டும் தாய் கட்சிக்கே தாவி வருவது அண்ணாமலைக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.