ரியாத் (07 டிச 2022): சவூதியில் பெற்றோர் ஸ்பான்ஷர்ஷிப்பில் உள்ள 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாஸ்போர்ட் துறை தெரிவித்துள்ளது
அதேபோல திருமணமான பெண்கள் கணவரின் பெயருக்கு ஸ்பான்சர்ஷிப்பை மாற்ற வேண்டும் என்றும் ஜவாசத் தெளிவுபடுத்தியுள்ளது.
தாய் அல்லது தந்தையின் சார்பு விசாவில் இருக்கும் ஆண் குழந்தைகள் 25 வயதை அடைந்தவுடன் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்ற வேண்டும் என்று ஜவாசத் தெளிவுபடுத்தியது.
25 வயது நிறைவடைந்த ஆண் குழந்தைகள் பெற்றோரின் சார்பு விசாவில் தொடர அனுமதி இல்லை. மேலும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் இகாமாவை புதுப்பிக்க மாணவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
25 வயதிற்குப் பிறகு, நீங்கள் வேலை விசாவில் மட்டுமே சவூதியில் தங்க முடியும். பெண்கள் பெற்றோர்களின் சார்பு விசாவில் தங்குவதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் இகாமாவை புதுப்பிப்பதற்கு, திருமணம் செய்து கொள்ளாததற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். திருமணமானவராக இருந்தால், கணவரின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற வேண்டும். ஸ்பான்சர்ஷிப் மாற்றத்தை முடிக்க பயனாளி சவுதி அரேபியாவில் இருக்க வேண்டும் என்றும் ஜவாசத் தெளிவுபடுத்தியுள்ளது.