விமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து!

Share this News:

மதுரை (27 மே 2020): இரண்டு மாதங்களுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பயணிகள் விமானத்தில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களில் பயணிக்க பயணிகள் வராததால் 1 விமானம் மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.

அதேபோல நாடெங்கும் விமானப் போக்குவரத்து 1162 விமானங்கள் இயக்குவதாக அறிவித்து 532 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற 630 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.


Share this News: