ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு!

Share this News:

மதுரை (02 நவ 2020): ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்கள் தடை செய்யக்கோரி அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் மூலம் ஏராளமான அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்தார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் உள்ளிட்டவற்றால் பல இளைஞர்கள் தற்கொலை மற்றும் பணம் இழப்பது தொடர்ந்து வருகிறது. இதனால் ஒரே மாதத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் சம்பவமும் நடைபெற்றுள்ளது. எனவே முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுவதையும் தடுக்க வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு தெரிவித்த நிலையில், இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Share this News:

Leave a Reply