சென்னை அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்!

Share this News:

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கையொட்டி, அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநகராட்சி நிறுத்தம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்‍கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்‍காமல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ஆனால், இந்த இலவச உணவுக்‍கு, 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது கட்டணம் வசூலிக்‍கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசுக்‍கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மே 31-ம் தேதி வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும், விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநாகராட்சி நிறுத்தியுள்ளது.


Share this News: