முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக மருத்துவரின் வெறுப்பூட்டும் பேச்சு -அதிர்ச்சி வீடியோ!

Share this News:

கான்பூர் (01 ஜூன் 2020): முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன.

இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப வந்த பயங்கரவாதிகள்” என்று கூறுகிறார்.

மேலும் “அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் ஆனால் நாங்கள் முஸ்லிம்களுக்கு விஐபி சிகிச்சை அளித்து வருகிறோம், எங்கள் வளங்களை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம் ” என்று ஆர்த்தி லால்சந்தானி கூறுகிறார்.

மேலும் “தனிமை சிறையில் வைக்கப்பட வேண்டியவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.” என்றும் கூறியுள்ளார்.

https://youtu.be/dEnCauPruco

ஆனால் இந்த வீடியொ சில தினங்களுக்கு முன்பு தப்லீக் ஜமாத்தினருக்கு சிகிச்சை அளிக்கும்போது பேசியது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் ஆர்த்தி ஏற்கனவே முஸ்லிம் கொரோனா நோயாளிகள் நர்ஸ்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்பதாக கூறினார். ஆனால் அப்படி எந்த நோயாளியும் செய்யவில்லை என்றும் அது பொய்யானது என்றும் நிரூபனமானது குறிப்பிடத்தக்கது.


Share this News: