பதற வைக்கும் விலை உயர்வு!

Share this News:

சென்னை (21 பிப் 2020): தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை அவ்வப்போது உச்சத்தை தொடுவதும், பின்பு சற்று குறைவதுமாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.52.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.52,300 ஆகவும் விற்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply