புதுடெல்லி (21 பிப் 2020): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
குடியுரிமை சட்டம் காரணமாக நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கடசிகள் மகாராஷ்டிராவிலும் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே சிஏஏ குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என உத்தவ் தாக்கரே சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனல் என்.ஆர்.சி அமல்படுத்தமாட்டாது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உத்தவ் தாகக்ரே மோடி, மற்றும் சோனியா காந்தி ஆகியோரை வெள்ளிக்கிழமை சதிக்கவுள்ளார்.
உத்தவ் தாக்கரே மோடியுடனானா சந்திப்பு குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், தெரிவிக்கையில், “இது அவர்களுக்கு இடையேயான ஒரு முறையான சந்திப்பு, இந்த சந்திப்பு குறித்து எந்த ஊகங்களும் தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.
அதேபோல சோனியா காந்தி – முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு “மரியாதைக்குரிய சந்திப்பு” என்று மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
“மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக ஆன பிறகு இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.