குடியரசு தினத்தையொட்டி கவர்னர் வாழ்த்து!

Share this News:

சென்னை (25 ஜன 2020): நாட்டின் 71 வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்திட உறுதி கொள்வோம்.

நம் வாழ்வின் மூச்சு, செயலை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையை கட்டிக்காப்பதில் தொடர்ந்து முன்னேறி செல்ல முன்வருவோம். அரசியலமைப்பு உருவாக பங்களித்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டமியற்றிய மேதைகளை நினைவு கூர்வோம். என்று அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply