தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்களின் அவதூறு – பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

சென்னை (16 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பி வரும் நிலையில், அந்த ஊடங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர பொதுக்கூட்டம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவில்லை.

மேலும் டெல்லியில் உரிய அனுமதி பெற்றே மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஊடகங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையே ஒளிபரப்ப வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவற்றை மீறி பல வீடியோ செயதிகள் வெளியாகியுள்ளன.

ஆனால், டெல்லியில் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவிப்பதாகவும், அதனை ஊடகங்களும் மிகைபடுத்தி செய்தி வெளியிடுகின்றன.

எனவே தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply