புதுக்கோட்டை (08 ஜன 2020): இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் முஸ்லிம் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தில் இந்துக்கள் அதிக சதவீதத்தில் வசிக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த கிராமத்தில் ஜியாவுதீன் (45) என்பவர் அதிக வாக்குகள் பெற்று ஊராட்சி தலைவரானார்.
இந்த வெற்றி குறித்து பேசிய ஜியாவுதீன்,”எங்கள் கிராமத்தின் முக்கிய தேவை, காவிரி நீர். இதைக் கொண்டு வந்து எங்கள் ஊரில் உள்ள அய்யன்குளம் டேங்கை நிறைத்து 25 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் விளைய செய்ய வேண்டும்” என்றார்.
மதம் கடந்து ஜியாவுதீனை அந்த கிராம மக்கள் மதிக்கின்றனர் என்பது கிராம மக்களின் பேச்சிலேயே தெரிந்தது. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த ஊரில் ஜியாவுதீனுடன் போட்டியிட்ட ஐந்து பேரும் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.