ஐதராபாத் (08 ஜன 2020): மூன்று வயது குழந்தைக்கு 35 வயது போட்டு வாக்காளர் அட்டை வழங்கி அசிங்கப்பட்டுள்ளனர் அதிகாரிகள்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் வசிக்கும் மெதுக்கு ரமேஷ் என்பவர் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டின் முகவரியில் அவரது மூன்று வயது மகள் நந்திதா பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. போதாதற்கு வயது 35 என பதியப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இதுகுறித்து அதிகாரிகளிம் நந்திதாவின் தந்தை பட்டியலிலிருந்து மகளின் பெயரை நீக்குமாறு புகார் அளித்துள்ளார்.