கோவை இந்து முன்னணி செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

Share this News:

கோவை (05 மார்ச் 2020): கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவரும் அவருடைய நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். அப்போது ஆனந்த் கோவை ராமநாதபுரம் பகுதியை கடந்து குறிச்சி செல்வதற்காக நஞ்சுண்டாபுரம் வழியாக சென்றனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு பாலத்தின் கீழ் சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆனந்தை இரும்புக்கம்பியால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து நண்பர்களுக்கு ஹரி தகவல் கொடுத்தார். அங்கு வந்த ஹரி மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்..

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வழிகள் அனைத்தும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவம் நிகழாவண்ணம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply