புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர்கானும் ஒருவர்.
தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 46 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த பல்வேறு சோக பின்னணிகளும் வெளிவரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி ஷிவ் விஹார் பகுதியில் கொலை வெறி பிடித்தவர்களின் இரத்தப் பசிக்கு, முதஸ்ஸிர் கான் என்வரும் இரையானார். அவர் வன்முறை கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு 8 மகள்கள் உள்ளனர். ஒருவர் பெயர் ஷிஃபா, 11 ஆம் வகுப்பு படிக்கிறார். இன்னொருவர் பிறந்து 18 நாட்களே ஆகும் கை குழந்தை. முதஸ்ஸிரை இழந்து அந்த குடும்பமே நிற்கதியாய் நிர்கிறது.
டெல்லி இனப்படுகொலையில் உயிர்களை பறிகொடுத்தது மட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் சொத்துக்களையும் பொதுமக்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.