அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

Share this News:

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில் குவிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்களுக்காக இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உணவு சமைத்து கொடுத்து அவர்களுக்கு விநியோகிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டக் களத்திலும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி இந்துக்கள், “சென்னை வெள்ளத்தின் போது திக்குமுக்காடி நின்ற எங்களை ஓடி வந்து அரவணைத்தது முஸ்லிம்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் நாமும் துணை நிற்போம் என்று தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமிய மக்களுக்காக இந்து மக்கள் துணை நிற்பது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this News:

Leave a Reply