டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் சரியானதுதான் – உச்ச நீதிமன்றம்!

Share this News:

புதுடெல்லி (17 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தேவையான ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை.

இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள். எனவே இப்போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அதேவேளை பொதுமக்களுக்கோ, சாலை போக்குவரத்திற்கோ போராட்டக் காரர்கள் இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் போராட்டம் நடக்கும் இடத்தை பொதுமக்கள் நலன் கருதி இட மாற்றம் செய்வது குறித்து பேச வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஷஹீன் பாக் போன்று தொடர் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply