சென்னை (04 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜே. அன்பழகன் 80 சதவீதம் வெண்டிலேஷன் உதவியிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் , ஜூன் 2 ஆம் தேதி இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்துப்பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்
ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளால் அன்பழகன் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மாஸ்க் வழியே ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 80 சதவிகித ஆக்சிஜன் வெண்டிலேட்டர் வழியே செலுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.